சிங்கம்புணரி அருகே கிராம ஒற்றுமையை பறைசாற்ற நடந்த மாபெரும் மீன்பிடித்  திருவிழா-குடும்பம் குடும்பமாக பங்கேற்ற கிராம மக்கள்
சிவகங்கை, 11 மார்ச் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் அதிக கண்மாய்கள் கொண்ட மாவட்டமாக உள்ளது. சிங்கம்புணரி பகுதிகளில் கடந்த ஆண்டு போதிய பருவ மழை பெய்யாததால் பெரும்பாலான கண்மாய்க்கள் நீரில்லாமல் வறண்டு காணப்படுகிறது, பெரியார் ஆத்து கால்வாய் பாசன வசத
மீன்பிடி திருவிழா


சிவகங்கை, 11 மார்ச் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் அதிக கண்மாய்கள் கொண்ட மாவட்டமாக உள்ளது. சிங்கம்புணரி

பகுதிகளில் கடந்த ஆண்டு போதிய பருவ மழை பெய்யாததால் பெரும்பாலான கண்மாய்க்கள்

நீரில்லாமல் வறண்டு காணப்படுகிறது,

பெரியார் ஆத்து கால்வாய் பாசன வசதி கொண்ட

சில கண்மாய்கள் மட்டும் தண்ணீர் நிரம்பியது.இந்நிலையில் விவசாய தேவைக்கு

தண்ணீர் பயன்படுத்தியதை தொடர்ந்து கண்மாயில் நீர் வற்ற தொடங்கியது.

இந்நிலையில்

இன்று சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே குட்டையன்பட்டி கிச்சந்தி கண்மாயில் நீர் வற்றியது. இதனால் நாட்டு மற்றும் வளர்ப்பு மீன்களைப் பிடிக்க

பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது இன்று காலை நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கண்மாயை சுற்றி காத்திருந்தனர்.

தொடர்ந்து மீன் பிடிக்க கிராம முக்கியஸ்தர்கள் அனுமதி கொடுத்ததும் வேகமாக கண்மாயில் இறங்கி மீன்பிடி வலை கச்சா,அரிவலை, கொசுவலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் கட்லா,பொட்டலா, ரோகு,கெண்டை உள்ளிட்ட மீன்களை பிடித்து

சென்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam