தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விடை பெற்றார் - மேற்கு வங்க ஆளுநராக நாளை பதவியேற்பு
சென்னை, 11 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாட்டின் ஆளுநராக கடந்த 2021 செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் பதவி வகித்து வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் திமுக தலைமையிலான மாநில அரசுக்கும் இடையே பெரும்பாலும் மோதல் போக்கே நிலவி வந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நி
Governor R.N. Ravi Bids Farewell


சென்னை, 11 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாட்டின் ஆளுநராக கடந்த 2021 செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் பதவி வகித்து வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் திமுக தலைமையிலான மாநில அரசுக்கும் இடையே பெரும்பாலும் மோதல் போக்கே நிலவி வந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை கிடப்பில் போடுவதாக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கு தொடர்ந்ததும், மாநில அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளுநர் முன்வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அம்மாநிலத்தின் ஆளுநராக ஆர்.என். ரவியும், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தின் ஆளுநராக கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கும் நிலையில், சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்டார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் புதுடெல்லி செல்லும் ஆர்.என். ரவி, அங்கிருந்து நாளை காலை கொல்கத்தாவுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்துக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழ்நாடு காவல்துறையினர் மரியாதை அளித்தனர்.

Hindusthan Samachar / vidya.b