பால்காரர் முருகேஷ் வீட்டில் 12 பவுன் நகை 2000 ரொக்க பணமும் பட்ட பகலில் கொள்ளை
கரூர், 11 மார்ச் (ஹி.ச.) கரூர் மாவட்டம் குளித்தலை, குப்பிரெட்டிப்பட்டி நாயக்கர் களத்தைச் சேர்ந்த பால்காரர் முருகேஷ் என்பவரின் வீட்டில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது
Lalapet


கரூர், 11 மார்ச் (ஹி.ச.)

கரூர் மாவட்டம் குளித்தலை,

குப்பிரெட்டிப்பட்டி நாயக்கர் களத்தைச் சேர்ந்த பால்காரர் முருகேஷ் என்பவரின் வீட்டில்,

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.

வீட்டின் உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு இருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2,000 ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்த முருகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடப்பதையும் நகை மற்றும் பணம் காணாமல் போனதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து சம்பவம் குறித்து உடனடியாக லாலாபேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதுடன், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் வீட்டில் புகுந்து நகை மற்றும் பணம் திருடிச் சென்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN