Enter your Email Address to subscribe to our newsletters

நாகை, 11 மார்ச் (ஹி.ச.)
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த ஆண்டில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில்
சம்பா தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை பணிகள் மிக தீவிரமாக
நடைபெற்று வருகிறது.
விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக
மாவட்டம் முழுவதும் 170 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு
நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில்
நேற்று மாலையிலும் இரவில் மழை பெய்ததால் வெண்மணி அரசு நேரடி நெல் கொள்முதல்
நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள்
இயக்கப்படாததால் கொள்முதல் நிலையத்தில் தேங்கி இருப்பதால் விவசாயிகளின்
நெல்லை பிடிப்பதற்கு தாமதம் ஆகுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நெல் மூட்டைகளை ஒரு வாரத்திற்கு மேல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் நெல் கொள்முதல் செய்யப்படாததால் பெய்யும் மழையால் நனைந்து ஈரப்பதம் கூடும் என்பதால்
விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ள அவர்கள் உடனடியாக கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை எடுத்துச்
செல்வதற்கு கூடுதலாக லாரிகளை இயக்க வேண்டும்.
மழையில் நனைந்து வரும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் ஈரப்பத தளர்வு செய்து
நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் வேதனை கோரிக்கை
வைத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam