Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 11 மார்ச் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமன்றியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தலைமை செவிலியர்கள் மெர்சி, ஈஸ்வரி ஆகியோர்
புஷ்பா படத்தில் வரும் ஊ அண்ட்டாவா என்ற தெலுங்கு பாடலுக்கு மருத்துவமனையில்
குத்தாட்டம் போட்டு தங்கள் குத்தாட்ட திறமையை வெளிப்படுத்தினர்.
அதை மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் 16 பேர் ரசித்து வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தனர்.
தலைமை செவிலியர்களின் குத்தாட்ட திறமை வெளி உலகத்திற்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த காட்சியை சமூக ஊடகங்கள் மூலம் பரவவிட்டனர்.
இதனை அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் குத்தாட்டம் போட்ட தலைமை செவிலியர்கள் இரண்டு
பேரையும் பணி இடை நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் 16 பேருக்கும் ஷோகாஷ் நோட்டீஸ்
வழங்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam