தென்பெண்ணையாற்றில் ரூ .57 கோடி செலவில் கரை பலப்படுத்தும் பணிகள் தொடக்கம்
கடலூர், 11 மார்ச் (ஹி.ச.) கடலுார் மாவட்டத்தில் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் தென்பெண்ணையாற்று கரைகள் வெள்ள காலங்களில் உடைந்து அருகில் உள்ள கிராமங்களில் பாதிப்பை ஏற்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக கடலோர பகுதியில் உள்ள நாணமே
Riverbank strengthening works


கடலூர், 11 மார்ச் (ஹி.ச.)

கடலுார் மாவட்டத்தில் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் தென்பெண்ணையாற்று கரைகள் வெள்ள காலங்களில் உடைந்து அருகில் உள்ள கிராமங்களில் பாதிப்பை ஏற்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.

குறிப்பாக கடலோர பகுதியில் உள்ள நாணமேடு, உச்சிமேடு, கண்டக்காடு, குண்டு உப்பலவாடி, தாழங்குடா,சுபா உப்பலவாடி, தியாகுநகர், சின்ன கங்கணாங்குப்பம், பெரிய கங்கணாங்குப்பம் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட கிராமங்கள்பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மழைக்காலம் வந்தாலே, அப்பகுதி மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்ணையாற்றின் வடக்கு கரை பெரிய கங்கணாங்குப்பம் பாலத்தில் இருந்து கடல் பகுதி வரை 5.75 கோடி ரூபாய்மதிப்பீட்டில் கரை பலப்படுத்தும் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக பெண்ணையாற்று பாலத்தில் துவங்கி குண்டுஉப்பலவாடி வரை தென்கரை முழுவதும் சீரமைக்க 9.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இதனால் உப்பலவாடி,கண்டக்காடு, தாழங்குடா, பல புதிய நகர்கள் மீது வெள்ளநீர் உட்புகாமல் தடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரியில், கடலுாருக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், 57 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, என்னென்ன பணிகள் செய்யப்படவுள்ளன என்பது குறித்து பொதுப்பணித்துறை சார்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்இருந்து பாலம் வரை கற்கள் பதிக்கப்பட உள்ளன. அதேபோல தண்ணீர் வேகம் அதிகம் உள்ள இடங்களிலும் இது போன்ற கற்கல் பதிக்கப்படுகின்றன.

ஆற்றிற்குள் உள்ள முள் செடிகள் அகற்றப்பட்டு மையப்பகுதி ஆழப்படுத்தப்பட உள்ளது. நாணமேடு-சுபா உப்பலவாடி இடையே உள்ளஆற்றின் வடக்கு கரைகள் பகுதி மீண்டும் பலப்படுத்தப்பட உள்ளன.

வெள்ளக்காலத்தில் வேகமாக தண்ணீர்செல்லும் பாதைகள் பலப்படுத்தப்பட உள்ளன.

Hindusthan Samachar / vidya.b