Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 11 மார்ச் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில், கரும்புக்கு டன்
ஒன்றுக்கு ரூ.4,000 விலை வழங்க வேண்டும் என்றும், 2025–26 ஆம் ஆண்டுக்கான
ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும்
கோரி இன்று காலை 11 மணி அளவில் விழுப்புரம் சென்னை சாலையில் விவசாயிகள் கையில்
கரும்புடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நீண்ட காலமாக இயங்காமல் உள்ள புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியை பொதுப் பயன்பாட்டு பகுதியாக அறிவித்து, அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை
பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்க
உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த போராட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்
தலைவர்
ப. கலிவரதன் தலைமையேற்றார்.
Hindusthan Samachar / GOKILA arumugam