Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 11 மார்ச் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேமாலூர் கிராமத்தில், கூவனூர் கிராமத்தைச் சேர்ந்த பாலா(32) என்பவரது முதல் மனைவி வசிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இரவு தனது நண்பர்கள் அஜித்(22), இயேசு (44), இருவருடன் மது அருந்திய அவர் முதல் மனைவியை பார்க்க வேண்டும் என கூறி காரில் சென்றுள்ளார்.
மூன்று பேரும் மது அருந்தி நிலையில் Google Map உதவியுடன் சென்ற போதுமுதல் மனைவியின் வீடு தெரியாமல் மாற்றுப் பாதையில் சென்றதாக சொல்லப்படுகிறது.
அப்போது அங்கிருந்த சிறுவர்களை அழைத்து முதல் மனைவியின் பெயரை சொல்லி வீட்டிற்கு எப்படி செல்வது என வழி கேட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அவர்கள் மூவரும் போதையில் இருப்பதைக் கண்டு ஊர் மக்கள் மூவரும் காரில் குழந்தையை கடத்த வந்ததாக கூறி தர்மடி கொடுத்து அங்குள்ள தேவாலயத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் அங்கு சென்ற போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீட்டு வர முயற்சி செய்தனர்.
ஆனால் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக போலீசாரை தகாத வார்த்தைகளால் கிராம மக்கள் வசைப்பாடி உள்ளனர்.
மேலும் பணத்தை வாங்கிக்கொண்டு அனுப்பிவிடுவீர்கள் என்று ஒருமையில் பேசியுள்ளனர். நீண்ட போராட்டத்திற்கு பலத்த காயமடைந்த மூன்று நபர்களையும் மீட்ட போலிசார் அவர்களை திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் சிகிச்சையில் இருப்பவர்களிடம் புகார் பெற்று கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் வேறுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முதல் மனைவியை பார்க்கச் சென்ற இடத்தில் குழந்தையை கடத்த வந்ததாக கூறி ஊர் மக்கள் பிடித்து தர்மடி கொடுத்து அவர்களை காரையும் உடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN