பிரதமரின் வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் -மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
திருச்சி, 11 மார்ச் (ஹி.ச.) மத்திய இணையமைச்சர் எல்.முருகன் திருச்சி ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா என்ற கேள்விக்கு? அனைவரும் தான் வருவார்
L Murugan


திருச்சி, 11 மார்ச் (ஹி.ச.)

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் திருச்சி ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா என்ற கேள்விக்கு?

அனைவரும் தான் வருவார்கள் என்றார்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு பல திட்டங்களை கொடுத்து வருகிறார்.

நிதியையும் கொடுத்து வருகிறார் என்று தெரிவித்தார்

திமுகவுக்கு வந்த கூட்டத்தை விட இரண்டு மடங்கு மக்கள் கூட உள்ளனர்.

இதுவரை திருச்சியில் மக்கள் பார்க்காத கூட்டத்தை பார்க்க போகிறார்கள்.

மதுராந்தகத்தில் பிரதமரின் வருகையும் அவரது பேச்சும் எழுச்சியை கொடுத்ததோடு, திமுகவுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது.

மதுரையை தொடர்ந்து திருச்சியில் நடைபெறும் கூட்டத்தின்மூலம், திமுகவை வீட்டுக்கு அனுப்புவது என தமிழ்நாடு மக்கள் முடிவை உறுதி செய்யும் கூட்டமாக திருச்சி கூட்டம் இருக்கும்.

பிரதமர் தமிழ்நாடு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பல திட்டங்களையும் நிதியையும் தந்துசெல்கிறார்.

பிரதமரின் வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN