UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, 11 மார்ச் (ஹி.ச) சென்னை பார்க் டவுன்,விக்டோரியா பொது அரங்கில், அகில இந்திய குடிமை பணித்தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு
Upsc


சென்னை, 11 மார்ச் (ஹி.ச)

சென்னை பார்க் டவுன்,விக்டோரியா பொது அரங்கில், அகில இந்திய குடிமை பணித்தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

2025-2026 ஆண்டில் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து மொத்தமாக 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசியது,

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன் பெற்று யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.

முதலமைச்சரின் கனவுத்திட்டம் நான் முதல்வன்.அகில இந்திய அளவில் டாப் 10 ராங்குகளில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

போட்டி தேர்வு எழுதும் தேர்வர்களின் பொருளாதார தடையை நீக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டது.

பெற்றோர்களின் இடத்தில் இருந்து கனவை நிறைவேற்ற முதல்வரின் திட்டம் இருந்துள்ளது.

UPSC தேர்வுக்கு படிக்க வேண்டும் என்றால் டெல்லி சென்று படிக்க வேண்டும் என்ற நிலையை நான் முதல்வன் திட்டம் மாற்றி உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் 100 பேர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற வைப்பது தான் நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம்.

UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சாமானிய மக்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பணியாற்றிட வேண்டும்.நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற 56 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியது,

UPSC தேர்வில் கடுமையான உழைப்பை கொடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு என வாழ்த்துகள்.உலக அளவில் மிகவும் கடுமையான தேர்வு UPSC தேர்வு.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து upsc தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது.

திமுக ஆட்சிக்கு வந்த பின் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது.இத்திடத்தின் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது.UPSC தேர்வில் 60 பேர் தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மகளின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.ஆட்சி செய்யும் நாங்கள் 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலை சந்திக்க வேண்டும்.அதிகாரிகளுக்கு அந்த நிலை இல்லை. 30 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் பணியில் அதிகாரிகள் செயல்படுவார்கள்.

அதிகாரிகள் மக்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.என்னை சுற்றி இருக்கும் அதிகாரிகளுக்கு ஓய்வு கிடையாது.அதிகாரிகள் நாட்டையும்,வீட்டையும் கவனிக்க வேண்டும்.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு All the best என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ