கட்சி உரிமை தொடர்பாக அன்புமணிக்கு எதிராக மருத்துவர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு இடைக்கால தடை
சென்னை, 12 மார்ச் (ஹி.ச.) கட்சி உரிமை தொடர்பாக அன்புமணிக்கு எதிராக மருத்துவர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சி பெயர், சின்னம் பயன்படுத்துவதை எதிர்த்து அன்புமணிக்கு எதிராக சிட்டி சி
Anbumani


சென்னை, 12 மார்ச் (ஹி.ச.)

கட்சி உரிமை தொடர்பாக அன்புமணிக்கு எதிராக மருத்துவர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்சி பெயர், சின்னம் பயன்படுத்துவதை எதிர்த்து அன்புமணிக்கு எதிராக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கில் தன்னை இணைக்கோரி பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் மனுவை சிட்டி சிவில் நீதிமன்றம் நிராகரித்து இருந்தது.

இந்த வழக்கில் தன்னையும் இணைக்ககோரி வடிவேல் இராவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய ராமதாசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இந்த மனுவின் மீதான விசாரணையை ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ