Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 மார்ச் (ஹி.ச)
முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வுவிற்கு (டான்செட்2026 ) மார்ச் 16ந் தேதி முதல் தேதி முதல் ஏப்ரல் 10 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணாப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
மேலும் முதல்முறையாக முதுகலைப் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போதே கலந்தாய்விற்கும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் முதுகலை தொழிற்கல்விப் படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு மூலம் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கும், முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் ஆகியவற்றிற்கு CEETA- நுழைவுத் தேர்வு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக் கழக பொதுநுழைவுத்தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வுவிற்கு (டான்செட்2026 ) மார்ச் 16 ந் தேதி முதல் ஏப்ரல் 10ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயக்கும் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக் கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேரலாம்.
MCA ,MBA படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 500 ரூபாயும், பிற வகுப்பினருக்கு 1000 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். இவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வு மே மாதம் 9ந் தேதி நடைபெறுகிறது அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள்,அண்ணா பல்கலைக்கழக மண்டல பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரலாம்.
CEETA, எம் .இ , எம்டெக், எம்.ஆர்க்,எம்.பிளான் ஆகிய முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 900 ரூபாயும், இதரபிரிவினருக்கு 1800 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இவர்களுக்கு கலந்தாய்வு கட்டணமும் இதில் அடங்கும். தேர்வுக் கட்டணத்துடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து கட்ட வேண்டும். இவர்களுக்கான நுழைவுத்தேர்வு மே 10ந் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்வுகள் சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்கால், மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர்,விழுப்புரம், பர்கூர் ஆகிய 15 நகரங்களில் தேர்வு நடத்தப்படும்.
https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் மாணவர்கள் கட்டணங்களை செலுத்த வேண்டும். மேலும் கடைசி நேரத்தில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க முன்கூட்டிய ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதே இணையதள முகவரியில் தேர்வுக்குரிய ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் ,
அனைத்து விண்ணப்பதாரர்களின் முடிவுகளும் மே 2026 இறுதிக்குள் வெளியிடப்படும். மேலும் M.E., M.Tech, M.Arch, M.Plan. சேர்க்கைக்கான கவுன்சிலிங் மே அல்லது ஜூன் மாதம் நடத்தப்படும் என
அதில் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ