Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 12 மார்ச் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம்,
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி அன்பழகன் (65). இவருக்கு சமுத்திரியன் (40) மற்றும் சத்யநாதன் (38) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
குடும்பத்திற்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் விவசாய நிலம் அந்த பகுதியில் உள்ளது.
திருமணமான இரு மகன்களுக்கும் சொத்து பங்கீடு குறித்து நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் மூத்த மகன் சமுத்திரியன் பாஜக பிரமுகராக இருந்து வந்ததாகவும், தம்பிக்கு கிடைக்க வேண்டிய சொத்துகளை வழங்காமல் ஏமாற்ற முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சொத்தை பிரித்து தர வேண்டும் என தம்பி சத்யநாதன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சத்யநாதன் தேங்காய் உரிக்கும் கம்பியால் சமுத்திரியனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சமுத்திரியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர்.
மேலும் கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக சத்யநாதனை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN