பாஜக நிர்வாகி தேங்காய் உரிக்கும் மிஷினால் தாக்கி கொலை- சொத்து தகராறில் தம்பி வெறிச் செயல்
தர்மபுரி, 12 மார்ச் (ஹி.ச.) தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன்கள் சாமுத்திரியன்,40. சத்யநாதன்,36. இதில் சாமுத்திரியன் கார் ஓட்டுநராகவும் டிராவல்ஸ் வைத்து தொழில் நடத்தி வந
கொலை


தர்மபுரி, 12 மார்ச் (ஹி.ச.)

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் கிராமத்தைச்

சேர்ந்தவர் அன்பழகன்.

இவரது மகன்கள் சாமுத்திரியன்,40. சத்யநாதன்,36.

இதில் சாமுத்திரியன் கார் ஓட்டுநராகவும் டிராவல்ஸ் வைத்து தொழில் நடத்தி

வந்தார்.

இது மட்டுமல்லாமல் பாப்பிரெட்டிப்பட்டி பாஜக கிழக்கு ஒன்றிய துணைத்

தலைவராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் சாமுத்திரியனுக்கும், சத்தியநாதனுக்கும் நீண்ட நாட்களாக சொத்து

தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் சத்தியநாதன், சாமுத்திரியினின் வீட்டுக்கு சென்று மனைவி

குழந்தைகளை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது

சம்பந்தமாக இரவு மோளையானூரில் உள்ள வீட்டுக்கு சென்று

சாமுத்திரியன்,சத்யநாதனிடம் கேட்டு உள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தேங்காய் உரிக்கும் மிஷினை எடுத்து சத்யா நாதன் தாக்கியதில் சாமுத்திரியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது

குறித்து தகவலறிந்த வந்த அரூர் டி எஸ் பி சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி

ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து சாமுத்திரியனின் உடலை கைப்பற்றி பிரயோக பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு

அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாமுத்திரியன் சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு ஏதாவது காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா?

என்பது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர

விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam