தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் - சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்
சென்னை, 12 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அதனால், தென் தமிழகக் கடலோர மாவட்டங்
தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் - சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்


சென்னை, 12 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அதனால், தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் வரக்கூடிய 16ஆம் தேதி வரை லேசான மழையும், 17ஆம் தேதி மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், 15ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று வானம் கொஞ்சம் மேகங்களுடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை நெருங்கி இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM