Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மார்ச் (ஹி.ச.)
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகச் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பல உணவகங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. அதோடு உணவுகளின் எண்ணிக்கையையும் உணவகங்கள் குறைத்துள்ளன.
வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கவும் அத்தியாவசியத் துறைகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
இன்று மாலை 4 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இதுபற்றி ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b