Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 12 மார்ச் (ஹி.ச.)
கோவை மாவட்டம்,
கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது.
அந்த உணவை சாப்பிட்ட 44 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது.
விசாரணையில் பள்ளியில் சத்துணவு தயாரிப்பில் அலட்சியம் ஏற்பட்டதாக தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, பள்ளியில் பணியாற்றி வந்த சமையலர் மனோகரி, உதவியாளர் கமலா மற்றும் சத்துணவு அமைப்பாளர் கௌசல்யா ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பானவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு திட்டத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN