சென்னையில் கல்லூரி மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை - போலீசார் விசாரணை
சென்னை, 12 மார்ச் (ஹி.ச.) கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஆய்வுத் திட்ட (ப்ராஜெக்ட்) பணிக்காகக் சென்னைக்கு வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி (வயது 22) ஒருவர் அடையார் பகுதியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி ப்ராஜெக்ட் பணிகளை மேற்
College Student Abducted in Car


சென்னை, 12 மார்ச் (ஹி.ச.)

கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஆய்வுத் திட்ட (ப்ராஜெக்ட்) பணிக்காகக் சென்னைக்கு வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி (வயது 22) ஒருவர் அடையார் பகுதியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி ப்ராஜெக்ட் பணிகளை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

அவர் சென்னைக்கு வந்த சில நாட்களிலேயே அவரது செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அந்த பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து வாட்ப் மூலமாக அனுப்பியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர், இந்த புகைப்படத்தை உனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என மாணவியை மிரட்டியுள்ளார்.

கடந்த 9ஆம் தேதி அந்த மாணவி ஆன்லைன் சேவை மூலமாகக் காரை புக் செய்து காத்திருந்துள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத காரில் வந்த நான்கு பேர் திடீரென மாணவி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் அந்த மாணவியின் முகத்தில் மயக்கம் பொடியைத் தூவி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வேறொரு இடத்தில் மாணவியை இறக்கிவிட்டுள்ளனர்.

அச்சமயத்தில் அவரது உடலில் மாற்றம் உணர்ந்ததால் கடந்த 10ஆம் தேதி அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் மாணவி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவுடன் மாணவியிடம், மீண்டும் காரில் வந்த மூன்று பேர் நடந்ததை பற்றி வெளியே கூறினால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் பரப்பி விடுவேன் மாணவியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவி அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b