கார்த்திக் சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்பி மாணிக்கம் தாகூர் கண்டனம்
சென்னை, 12 மார்ச் (ஹி.ச.) நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அ
Manickam


He


சென்னை, 12 மார்ச் (ஹி.ச.)

நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

இன்று அதிகாலையில் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் பி சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் அதிர்ச்சியளிப்பதுடன் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து நான் அவருடன் நேரடியாக பேசியுள்ளேன். அவரும், அலுவலகத்தில் இருந்தவர்களும் பாதுகாப்பாக இருப்பது நிம்மதியளிக்கிறது.

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஜனநாயகத்தில் இயல்பானவை. ஆனால் அதனை வன்முறை மூலம் வெளிப்படுத்துவது ஜனநாயகத்திற்கே எதிரானது. அரசியல் எதிர்ப்பை வன்முறையாக மாற்ற முயலும் எந்த சக்திகளையும் நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்து, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ