Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 12 மார்ச் (ஹி.ச.)
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒன்றிணைந்து ஈரான் தேசத்தின் மீது ஆகாய மார்க்கமாக கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி மிகக் கடுமையான தாக்குதல் நடத்தின.
தொடர்ச்சியாக நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவரது மனைவி, புதல்வி, மருமகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். இதனை ஈரான் நாடும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான நெருக்கடியான சூழல் நிலவுகிறது. ஈரானும் பதிலுக்குத் தாக்கி வருவதால், மோதல் நீடித்து வருகிறது.
மேற்கு ஆசியப் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் உலகம் முழுவதும் பாதிப்பு உண்டாகியுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில்,
ஈரானில் இனி குறி வைத்துத் தாக்குவதற்கு எதுவுமில்லை. ஈரான் மீதான தாக்குதலில் பெரும்பான்மையான இலக்குகளை அடைந்துவிட்டோம்.
இன்னும் சில நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்பு, விரைவில் ஈரானில் யுத்தம் முடிவுக்கு வந்துவிடும்.
என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM