Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 12 மார்ச் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம்,
சங்கரன்கோவில் அருகே உள்ள கோமதி முத்துபுரம் பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் மின்சார பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த தமிழரசன் மின்சார வேலை செய்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தமிழரசன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்த நல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழரசனின் உடலை போலீசார் மீட்டு சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கரிவலம்வந்த நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN