வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உதயசூரியன் சின்னம் வெற்றி அடைய செய்ய வேண்டும் -முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூர், 12 மார்ச் (ஹி.ச.) கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே வன்னியர் மக்கள் கட்சி சார்பில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் நிறுவன தலைவர் சக்தி படையாட்சி தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கரூர்
s


கரூர், 12 மார்ச் (ஹி.ச.)

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே வன்னியர் மக்கள் கட்சி சார்பில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் நிறுவன தலைவர் சக்தி படையாட்சி தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசுகையில்,

அரசின் திட்டம் ஒரு பக்கம் கரூர் மக்களின் வளர்ச்சி ஒரு பக்கம் உங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவது ஒரு பக்கம் என நம்முடைய தளபதி ஐந்தாயிரம் கோடி வளர்ச்சி திட்டங்களை கரூர் மாவட்டத்திற்கு வழங்கி உள்ளார் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் தீவு போல இருந்த ஊராட்சிகளை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என நெருர் - உன்னியூர் பாலம் 101 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைத்திருக்கிறார்.

கோயம்பள்ளி - மேலப்பாளையம் இன்னைக்கும் வகையில் அமராவதி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் கடந்த அதிமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில் அந்த பணிகளை செய்யாமல் விட்டு விட்டனர். இந்நிலையை அறிந்து இணைப்பு சாலையை 11 கோடியை வழங்கி உள்ளார்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உதயசூரியன் சின்னம் வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / Durai.J