Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 12 மார்ச் (ஹி.ச.)
திருநெல்வேலி மாநகர காவல் துறையினர் மேலப்பாளையம் குறுந்துடையார்புரம் சரகத்தில் கஞ்சா மற்றும் இதர போதை வஸ்துகள் விற்பனையைத் தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அவ்வழியே வந்த திருமால் நகரைச் சார்ந்த துளசி (வயது 19) என்பவரை பிடித்து காவல் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அவர் வசம் உயிர்கொல்லியான, அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்ட சுமார் 1.500 கிலோ கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின் அந்த கஞ்சாவையும், அதனை எடுத்துச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றி, மேலப்பாளையம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்து, துளசியை கைது செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM