Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 12 மார்ச் (ஹி.ச.)
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக, சில நாட்களுக்கு முன்பு சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை சுமார் ரூ.60 வரை அதிகரித்துள்ளது.
வியாபார பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.115 வரை உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஆனால், இந்தியாவுக்கு கியாஸ் சிலிண்டர்களை விற்பனை செய்ய அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நார்வே போன்ற நாடுகள் முன்வந்துள்ளன என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்பொழுது வேண்டுமானாலும் உயரலாம் என்ற பயம் வாகன ஓட்டிகளுக்கு இருக்கிறது.
இது எப்போது நடக்கும். அதற்கான வாய்ப்புகள் என்ன என்பது பற்றி அரசாங்க வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 130 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு மேல் உயரும்போது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆனால், நாட்டில் எந்த பெட்ரோல் நிலையத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொய்யான தகவல்களை நம்பி பொதுமக்கள் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம் என்று ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது:
நாடு முழுவதும் உள்ள அனைத்து எச்பிசிஎல் பெட்ரோல் நிலையங்களும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.
பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள்கள் போதுமான அளவு உள்ளன, மேலும் அவை தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம். யாரும் பயந்து போய் அதிக அளவில் வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM