Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 12 மார்ச் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கா.மாமனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி ராபின். இவரும் அம்மு என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு அங்கு வசித்து வந்தனர்.
குடும்ப வாழ்க்கையில் சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மனைவி அம்முவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கடந்த
மார்ச் 8-ஆம் தேதி இரவு மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது தூக்க கலக்கத்தில் இருந்த அந்தோணி ராபின் மீது அவரது மனைவி அம்மு பெட்ரோலை ஊற்றியதாக கூறப்படுகிறது.
திடீரென ஏற்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்தோணி ராபின் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி சாலைக்கு ஓடிச் சென்றுள்ளார்.
அவரை பின்தொடர்ந்து வந்த அம்மு, அந்தோணி ராபின் மீது தீ வைத்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில் அந்தோணி ராபின் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அந்தோணி ராபின் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் கா.மாமனந்தல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN