Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 12 மார்ச் (ஹி.ச.)
நாகர்கோவில் சைமன்நகர் பகுதியை சேர்ந்தவர் சைமன்(84). இவர்,காமராஜர்
அமைச்சரவையில் உள்ளாட்சி, மீன் வளத்துறை அமைச்சராகப் இருந்த லூர்தம்மாள்
சைமனின் மகன் ஆவார்.
இவர் தற்போது சென்னை தியாகராயநகரில் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அருகே உள்ள 2ஏக்கர்
நிலத்தையும், அங்குள்ள கட்டிடத்தையும் பெல்ஜியத்தை சேர்ந்த கெரின்முரேன்
என்பவர் கடந்த 1963ம் ஆண்டு வாங்கினார்.
இந்த சொத்தின் காவலாளியாக அப்பச்சன் என்பவர் இருந்தார் கடந்த 1975ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி கெரின் முரேனின்
சொத்து ஆவணத்தை போலியாக தயார் செய்து அப்பச்சன் மற்றும் அவரது மகன் மற்றும்
சிலர் சேர்ந்து விற்பனை செய்துள்ளனர்.
இதற்கு அப்போதைய சார் பதிவாளரும் உதவி
புரிந்துள்ளார்.
எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விசாரணை நடத்தி எடுக்க
வேண்டும் எனபுகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவுக்கு போலீசாருக்கு எஸ்.பி ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் போலி ஆவணம்
தயாரித்து மோசடி நடந்தது தெரிய வந்ததையடுத்து காவலாளி அப்பச்சன், அவரது மகன்
ஸ்டீபன் மற்றும் சார்பதிவாளர் உட்பட 23 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam