கேரளாவில் சொகுசு காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் மூன்று பேர் பலி
கேரளா, 12 மார்ச் (ஹி.ச.) கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேர் தங்களது காரில் விமான நிலையத்திற்கு சென்று திருப்பி உள்ளனர். அப்போது மலப்புரம் கொன்டேட்டி பகுதியில் சந்திப்பில் நெருங்கும் போது காரம் தனியார் பேருந்தும் நேருக்கு ந
விபத்து


கேரளா, 12 மார்ச் (ஹி.ச.)

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேர் தங்களது காரில் விமான

நிலையத்திற்கு சென்று திருப்பி உள்ளனர்.

அப்போது மலப்புரம் கொன்டேட்டி

பகுதியில் சந்திப்பில் நெருங்கும் போது காரம் தனியார் பேருந்தும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்த மூன்று பேரை

அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுமதித்தனர் சிகிச்சை

பலனின்றி தற்போது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த காட்சிகள் அந்த

பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான தற்போது வெளியாகி உள்ளது.

விமான நிலையத்திற்கு சென்று திரும்பிய காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும்

சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam