Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 12 மார்ச் (ஹி.ச.)
நெல்லையில் 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை
செய்த வழக்கில் கைதான கூலித் தொழிலாளிக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட
போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்சேகர். 41 வயதான இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இவர் கடந்த
2023 ஆம் ஆண்டு 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை ஒரே நேரத்தில் வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
இந்த கொடூர சம்பவத்தை வெளியில் யாரிடமாவது வெளியில் சொன்னால் கொலை செய்து
விடுவதாக சிறுமிகளை ஆனந்த் சேகர் கடுமையாக மிரட்டியுள்ளார்.
இதனால்
சிறுமிகள்இதுகுறிப்பு யாரிடமும் வாய் திறக்கவில்லை. ஆனால் அவர்களின் அன்றாட
நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்துள்ளது.
இதை கவனித்த பெற்றோர்கள்
அவர்களிடம் விசாரித்துள்ள நிலையில் தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள்,
பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த் சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுரேஷ்குமார் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு அளித்தார்.
அவர் தனது தீர்ப்பில், இது சமூகத்தில் நடைபெறும் அரிதிலும் அரிதான வழக்கு என சுட்டிக்காட்டினார்.
பிஞ்சு குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் சேகருக்கு
தூக்கு தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் அரசு சார்பில் தலா ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam