சொத்து வரி செலுத்தம் கால கெடு மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, 12 மார்ச் (ஹி.ச) சென்னை வாழ் மக்கள் தங்கள் சொத்து வரியை மார்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துளது. இந்தக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரியைச் செலுத்துவதன் மூலம், தாமதக் கட்டணம் அல்ல
Property Tax Payment Deadline Ends on March 31


சென்னை, 12 மார்ச் (ஹி.ச)

சென்னை வாழ் மக்கள் தங்கள் சொத்து வரியை மார்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துளது.

இந்தக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரியைச் செலுத்துவதன் மூலம், தாமதக் கட்டணம் அல்லது அபராதம் (Penalty) விதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் சொத்துவரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல தேவையில்லை. வாட்ஸ்அப் வழியாகவே தங்களின் சொத்துவரியை செலுத்திவிட முடியும்.

முதலில் 9445061913 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணை உங்கள் மொபைலில் சேமிக்கவும். அந்த எண்ணை சேமித்தவும் வரம் விருப்பங்களில் Most Used Services என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் அதில் Property Tax என்ற பிரிவைத் தேர்வு செய்து, உங்கள் விவரங்களை உள்ளிட்டு வரியைச் சுலபமாகச் செலுத்திவிடலாம்.

வாட்ஸ்அப் வசதி தவிர, இணையம் வசதி இல்லாதவர்கள் அல்லது நேரடியாகச் செலுத்த விரும்புவோருக்காகப் பிற வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அருகாமையில் உள்ள மாநகராட்சி அலுவலகங்கள் (Zonal Offices) மூலம் வரி செலுத்தலாம்.

அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்கள் (e-Seva Centres) வாயிலாகவும் சொத்து வரியைச் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, சென்னை மக்கள் இதுவரை சொத்து வரி செலுத்தவில்லை என்றால் உடனடியாக இந்த வழிமுறைகளை பின்பற்றி வரியை செலுத்தவும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b