Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 12 மார்ச் (ஹி.ச.)
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழக அரசு உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும் அரசியல் காப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கும் தமிழக அரசே கண்டித்தும் அரசு அறிவித்த எஸ் ஓ பி ஐ திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை திலகர் திடலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பர்வேஸ் தலைமை வகித்தார்.
இதில் 300-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் கையில் பதாகைகளோடு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Hindusthan Samachar / ANANDHAN