ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
புதுடெல்லி, 12 மார்ச் (ஹி.ச.) பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி கொல்லப்பட்டார். இந்த நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பிரபலமான ரவுடியான நாகேந்தி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை


புதுடெல்லி, 12 மார்ச் (ஹி.ச.)

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி கொல்லப்பட்டார்.

இந்த நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் பிரபலமான ரவுடியான நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உட்பட 30 நபர்கள் மீது காவல்துறை குற்றம் சாட்டியது. இதில் 28 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

முக்கியமான குற்றவாளியான நாகேந்திரன் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். செந்தில் உட்பட இரண்டு நபர்கள் இன்னும் தலைமறைவாக இருக்கிறார்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை நடந்து 4 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 250 சாட்சிகளிடம் விசாரணை செய்து 736 பக்க அறிக்கை தயாரித்து காவல்துறையினர் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அஸ்வத்தாமன், பிரதீப், ஹரிஹரன், சதீஷ்குமார், சிவா, புதூர் அப்பு, முகிலன், விஜயகுமார், விக்னேஷ், ராஜேஷ், கோபி, செந்தில்குமார் உட்பட 14 பேருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி முறையீடு செய்ததால் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதனைத் தொடர்ந்து அஸ்வத்தாமன் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பார்த்தசாரதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அதேபோல புதூர் அப்பு, சிவா, முகிலன் சார்பில் வழக்கறிஞர் எஸ்.வைரவன், பிரதீப் சார்பில் வழக்கறிஞர் ஜஸ்வந்தி, சதீஷ்குமார் சார்பில் வழக்கறிஞர் குமார் மிகிர் ஆகியோரும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுக்களில், “எல்லா விஷயங்களையும் கவனத்தில் கொள்ளவில்லை என்றும், உத்தரவை ரத்து செய்து ஜாமீன் வழங்க வேண்டும்” என்றும் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM