Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் சந்தி சிரித்து போயிருக்கும் சட்டம் ஒழுங்கை கண்டித்தும், சாதிவாரி கணக்கெடுப்புக்கான
ஆய்வை நடத்த வலியுறுத்தியும், பாரபட்சமான பிரச்சார வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்தும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதைப் பொருள் கலாச்சாரம் பெருகி விட்டது ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற த.வெ.க. நிர்வாகிகள், திமுக
அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர்
அருண்ராஜ்,
தமிழ்நாடு எப்படி இவ்வளவு அமைதியான மாநிலமாக இருக்கிறது என என்னுடன்
பணிபுரிந்த சக அதிகாரிகள் முன்பெல்லாம் கேட்டிருக்கிறார்கள்
குற்ற நிகழ்வுகள் மிகவும் குறைவாக
இருந்த மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. ஆனால், இன்றைய நிலைமை எப்படி இருக்கிறது? கடந்த 15 நாட்களில் மட்டும் எவ்வளவு குற்ற நிகழ்வுகள் நடந்திருக்கிறது என நம் தலைவர் பட்டியலிட்டு பதிவு போட்டிருக்கிறார்.
நேற்று கூட தூத்துக்குடியில் பிளஸ் டூ மாணவி இயற்கை உபாதை கழிக்க சென்ற போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து விட்டார்கள்
மதுராந்தகத்தில் 14 வயது
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இரவு முழுவதும் காட்டில் தவித்து 10 கிலோ மீட்டர்
நடந்தே காவல் நிலையம் வந்து சேர்ந்திருக்கிறார் நான் முதலமைச்சரிடம் கேட்கிறேன் இப்படி பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படும் பிள்ளைகளுக்கு ஈமச் சடங்கு செய்யவா 5000
பணம் போட்டீர்கள்? அரசின் முதல் கடமையே பாதுகாப்பு தான்.! பாதுகாப்பு கொடுக்காமல் என்ன நலத்
திட்டங்களை கொடுத்தாலும் மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.
கடந்த ஆட்சியில்
குற்றங்கள் நடக்க வில்லையா? என திமுகவினர் சிலர் பேசுகிறார்கள்.! சி.எம்.சார் செய்ய வேண்டிய
வேலையை சரியாக செய்தால் ஏன் குற்றங்கள் நடக்கப் போகிறது?
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றார்.! அதற்கு பிறகு
ஏன் ரெகுலர் டிஜிபி நியமனம் செய்யவில்லை.! 7 மாதம் ஆகி விட்டது.! 7 மாதமாக தமிழ்நாடு போன்ற
மாநிலத்திற்கு ரெகுலர் டிஜிபியை நியமனம் செய்ய முடியாத நீங்கள் தான் தற்குறி.! முதலமைச்சராக இருந்தால் சில தகுதிகள் இருக்க வேண்டும்.! சொந்தமாக முடிவெடுக்க வேண்டும்.! அப்படி இல்லை
என்றால் அடுத்தவர்கள் சொல்லியாவது முடிவெடுக்க வேண்டும்.! ஆனால், இப்போ இருக்கிற மு.க. ஸ்டாலினுக்கு இரண்டும் இருக்கா? இல்லையா? என மக்களே முடிவு செய்யட்டும்.!
ரெகுலர் டிஜிபியை நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து பார்த்தோம்.! கண்டித்து பார்த்தோம்.! நகைச்சுவையாக கூட கேட்டு பார்த்தோம்.! ஆனாலும் ரெகுலர் டிஜிபியை முதலமை
ச்சரால் நியமனம் செய்ய முடியவில்லை.! அது ஏன்? ஒரு தலைமை ஆசிரியர் இல்லாமல் எப்படி ஒரு
பள்ளிக்கூடம் சரியாக இயங்காதோ, அதே மாதிரி டிஜிபி இல்லாமல் காவல்துறை எப்படி சரியாக
இயங்கும்? சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஒரு ரெகுலர் டிஜிபியை கூட நியமனம் செய்ய முடியாமல்
திறனற்று ஸ்டாலின் சார் இருப்பது மிக மிக வருத்தமாக இருக்கிறது.!
குற்றங்களுக்கு அடிப்படையே போதைப் பொருள் கலாச்சாரம் தான்.! ஆனால், ஒரு அமைச்சர் சொல்
கிறார் கஞ்சாவே இல்லை என்று.! நீங்கள் தான் உண்மையான தற்குறி கூட்டம்.! முதலில் பிரச்சனை என்னவென்று தெரிந்தால் தான் சரி செய்ய முடியும்.! ஆனால், முதலமைச்சருக்கு பிரச்சனையே என்னவென்று தெரியவில்லை.! ஸ்டாலின் சார் கையில் சிக்கி தமிழ்நாடு சின்னாபின்னாமாகி
சென்று கொண்டிருக்கிறது.
நம் போராட்டத்தின் முக்கியமான நோக்கம், சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு.! நான் இந்த
இடத்தில் நிற்க முதல் காரணம் கல்வி தான்.! கல்வி எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்றால்
இட ஒதுக்கீடு மிக மிக அவசியம்.! இட ஒதுக்கீடு கொடுப்பதற்கான முதல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டதே தமிழ்நாட்டில் நடந்த போராட்டம் காரணமாக தான்.! சென்னையில் கான்வெண்ட்
பள்ளியில் படிக்கும் மாணவனையும், கிராமத்தில் தமிழ் வழியில் படிக்கும் மாணவனையும் ஒப்பிட
முடியுமா? முடியாது.! அதற்காக தான் இட ஒதுக்கீடு.! இட ஒதுக்கீடு மூலம் பல தலைமுறை
மாணவர்கள் பயன் பெற்றிருக்கிறார்கள்.! ஆனால், இட ஒதுக்கீடு மூலம் கிடைக்கும் பலன்கள்
அனைத்து சமூகத்தினருக்கும் கிடைத்திருக்கிறதா? என்று பார்த்தால் இல்லை என்று தான்
சொல்ல வேண்டும். இதற்காக தான் சாதி வாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்த
வேண்டும் என கேட்கிறோம்.!
ஆனால், பாஜகவின் மொழியிலேயே ஸ்டாலின் சாரும் பேசிக் கொண்டிருக்கிறார்.! ஒரு மாநிலத்தால் சாதிவாரி கணக்காய்வு நடத்த முடியாது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகிறார்.!
அதே மாதிரி தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பேசிக் கொண்டிருக்கிறார்.! பாஜகவுக்கும், உங்களு
க்கும் என்ன வித்தியாசம்.! உங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியே கர்நாடகாவில் 2015-ம் ஆண்டு ஒரு முறையும், 2025-ல் ஒரு முறையும் சாதிவாரி கணக்காய்வு நடத்தியிருக்கிறார்கள். அதேமாதிரி தெலங்கானா மாநிலத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியிருக்கிறார்கள்.! உத்தரபிரதேசத்தில்
அகிலேஷ் யாதவ் கூட சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்து
இருக்கிறார்.! சமூக நீதி சமூக நீதி என மக்களை ஏமாற்றி விட்டு உண்மையான சமூக நீதிக்கு வழி
வகுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான்
உண்மை.! இதை மக்கள் புரிந்து கொண்டார்கள் விரைவில் துரத்தி அடிப்பார்கள்
இறுதியாக, SOP பற்றி பேசியே ஆக வேண்டும் நம் தலைவர் அவர்கள் மக்களை சந்தித்தால் ஒவ்வொரு கிராமங்களுக்கும், தொகுதிகளுக்கும் சென்றால் நம் கட்சிக்கான ஆதரவு பல மடங்கு உயர்ந்து கடைசியில் திமுகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்பதால் தான் தடுக்க பார்க்கிறார்கள். திமுக மட்டும் எத்தனை
மாநாடு போட்டிருக்கிறார்கள் இளைஞரணி மாநாடு, மகளிரணி மாநாடு என நடத்துகிறார்கள் வாரத்திற்
கு இரண்டு, மூன்று மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள் உங்களுக்கெல்லாம் மட்டும் எப்படி பெர்மி
ஷன் கிடைக்கிறது?
தமிழக காவல்துறைக்கு முழு சுதந்திரமே இல்லை இப்போ சென்னையில் சேகர்பாபுவை மீறி எந்த போலீஸ் அதிகாரியாவது ஒரு முடிவை எடுக்க முடியுமா? காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கி
றது.! திமுக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் சொல்வதை தான் கேட்கும் நிலை இரு
க்கிறது.! ஒவ்வொரு முறையும் தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.!
நம் மாவட்ட செயலாளர்கள் எல்லாருக்கும் தெரியும் தலைவருக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படவில்லை
ஒவ்வொரு மாவட்டத்திலும் த.வெ.க.வினரின் கூட்டம் என்றால் அனுமதி மறுக்கப்படுகிறது
தமிழக வெற்றிக் கழகத்தை கட்டுப்படுத்த இவ்வளவு முயற்சி எடுக்கும் ஸ்டாலின் சார், அதில் ஒரு பர்செண்ட்
ஆச்சும் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முயற்சி எடுங்கள் என்று அவர் பேசினார்
Hindusthan Samachar / P YUVARAJ