உத்தரகாண்ட் முதலமைச்சர் தாமி கைர்சைனில் உள்ள பாரதி தேவி ஆலயத்தில் வழிபாடு
சமோலி,12 மார்ச் (ஹி.ச.) உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இன்று அதிகாலை நடைபயணம் மேற்கொண்டபோது, கைர்சைனில் அமைந்திருக்கும் பாரதி தேவி திருக்கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டார். மாநில மக்களுடைய சந்தோஷம் மற்றும் வளமான வாழ்விற்காகவும், உத
உத்தரகாண்ட் முதலமைச்சர் தாமி கைர்சைனில் உள்ள பாரதி தேவி ஆலயத்தில் வழிபாடு


சமோலி,12 மார்ச் (ஹி.ச.)

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இன்று அதிகாலை நடைபயணம் மேற்கொண்டபோது, கைர்சைனில் அமைந்திருக்கும் பாரதி தேவி திருக்கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டார்.

மாநில மக்களுடைய சந்தோஷம் மற்றும் வளமான வாழ்விற்காகவும், உத்தரகாண்டின் சீரான முன்னேற்றத்திற்காகவும் அருள் வேண்டி, தேவியின் திருவடிகளில் பணிந்து ஆசி பெற்றார் முதல்வர்.

முன்னதாக நேற்று, ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், உத்தரகாண்ட் அரசாங்கம் சமீபத்தில் தாக்கல் செய்த மாநில நிதிநிலை அறிக்கையில் இருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஒதுக்கியது.

முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ செய்தியின்படி,

கங்கை நதி, யமுனை நதி, சார் தாம், ஆதி கைலாஷ் போன்ற புனித நதிகள் மற்றும் பல்வேறு சக்தி பீடங்களை உள்ளடக்கிய உத்தரகாண்ட் மாநிலம், தொன்று தொட்டு உலகெங்கிலும் உள்ள சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களின் நம்பிக்கைக்குரிய இடமாக விளங்குகிறது.

ஆகவே, உத்தரகாண்ட் மாநிலத்தை மத மற்றும் ஆன்மீக சுற்றுலாவுக்கான முக்கிய கேந்திரமாக மேம்படுத்த மாநில அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இதன் மூலம் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2027 ஆம் வருடம் ஹரித்வாரில் ஆராத் கும்பமேளா நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM