Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மார்ச் (ஹி.ச.)
நடிகர் அஜித்குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெறும் கார் ரேசிங் பந்தயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஒரு சில போட்டிகளில் மூன்றாம் இடத்தை பிடித்தும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நிலையில் துபாயில் நடைபெறும் கார் ரேஸ் பந்தயத்திற்காக அங்கே தங்கி பயிற்சி பெற்று வந்தவர் போர் பதற்றம் காரணமாக சமீபத்தில் இந்தியா திரும்பினார்.
இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் ரேசிங் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக பிரபல கார் நிறுவனமான மகிந்திரா நடிகர் அஜித்குமாருக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள BE 6 SUV காரை பரிசாக வழங்கியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் மகிந்திரா குழுமத்தின் வாகன தொழில் பிரிவு தலைவர் ஆர் வேலுச்சாமி இதனை நடிகர் அஜித்குமாருக்கு வழங்கினார்.
நடிகர் அஜித்குமாருக்கு கார் வழங்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ