Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 மார்ச் (ஹி.ச)
தமிழக வருவாய்துறையும், காவல்துறையும் திமுகவின் துணை அமைப்புகள் போல செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் தமிழக காவல்துறை பொறுப்பு இயக்குனர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோரின் மழுப்பலான, உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்யும் பத்திரிக்கையாளர் சந்திப்பை பார்க்கும் வருந்தத்தக்க நிலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களில் தமிழகமெங்கும் 60 க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்திருப்பதும், கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் தொடர்ச்சியாக நாள்தோறும் படுகொலைகள் நடந்தேறி வருவதும் 57 மாத திமுக ஆட்சியில் 7600 படுகொலைகள் நடந்திருப்பதும் தமிழகத்தில் மிகமோசமான நிலைக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்திருப்பதையும் தமிழகத்தில் இதுவரை திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ள குற்ற சம்பங்களின் எண்ணிக்கை உணர்த்துகிறது.
திமுக ஆட்சி எப்போது விடியும், தமிழகத்திற்கு எப்போது விமோச்சனம் பிறக்கும் என தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்திற்கு விமோசனம் பிறக்கும் என்பது நிதர்சனம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ