Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மார்ச் (ஹி.ச)
சென்னை ஜாம்பஜார் வானியன் தெருவில் காஸ்மோ என்ற பெயரில் தனியார் பிரின்டிங் கடை செயல்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆம் தேதி பிரின்டிங் கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த பல்சர் பைக்கை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றதாக ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட நபரில் ஒருவர் கடலூர் மாவட்டம் புதுகுப்பம் பகுதியை சேர்ந்த காவலர் ஜெயசந்திரன் (41) என்பதும் மற்றொருவர் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த பைக் மெக்கானிக் யூசுப் (38) என்பது தெரிய வந்துள்ளது..
மேலும் காவலர் ஜெயசந்திரன் 2008 ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்ததும் பின்னர் அவரது மனைவி காலமானதால் மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.
இதனால் காவல் ஜெயசந்திரன் பணிநீக்கம் செய்யபட்டதும் , அதன்பின் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த முன்னாள் காவலர் ஜெயசந்திரன் தன் நண்பரான பைக் மெக்கானிக் வேலை செய்து வரும் யூசுப் உடன் சேர்ந்து ராயப்பேட்டை, ஜாம்பஜார், திருவல்லிக்கேணி பகுதியில் சாலையோரம் பூட்டி வைத்திருந்த பைக்குகளை நோட்ட மிட்டு திருடி வந்தும் பின்னர் திருடி பைக்குகளை மெக்கானிக் யூசுப் மூலம் விற்று அதில் வரும் பணத்தை வைத்து உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
ஏற்கனவே கடந்த 2022 ஆண்டு முன்னாள் காவலர் ஜெயசந்திரன் மைலாப்பூர் காவல் நிலையத்தில் இருந்து பைக் திருடி விற்ற வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீஸார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.
பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ