Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 13 மார்ச் (ஹி.ச.)
கடலூரில் கடந்தாண்டு ஜூலை மாதம் ரயில்வே கேட் மூடப்படாததால் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில், சிதம்பரம் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் கேட் கீப்பருக்கு குரல் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய ஆதாரமான கேட் கீப்பர் பங்கஜ் குமார், ரயில் நிலைய மேலாளர் உடன் பேசிய ஆடியோ பதிவு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கேட்டை மூட மறந்து விட்டதாக பங்கஜ் கூறியது பதிவாகி இருந்தது.
தனக்கு குரல் பதிவு செய்யக் கூடாது என பங்கஜ் குமார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், வரும் மார்ச் 27 ஆம் தேதி குரல் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும், தனக்கு தமிழ், ஆங்கிலம் தெரியாததால் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட அனைத்து நகல்களையும் இந்தியில் மொழி பெயர்த்து வழங்க வேண்டும் என்ற அவரது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN