சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுபாட்டால் சின்ன சேலத்தில் பொதுமக்கள் அவதி
சேலம், 13 மார்ச் (ஹி.ச.) கடந்த சில தினங்களாக நிலவி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுபாட்டால் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் சின்ன சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிலிண்டரை முன்பதி
சிலிண்டர்


சேலம், 13 மார்ச் (ஹி.ச.)

கடந்த சில தினங்களாக நிலவி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுபாட்டால்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் சின்ன சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள

கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிலிண்டரை முன்பதிவு செய்து அதனை பெற்றுக் கொள்ள ஒரே நேரத்தில் சிலிண்டர் விநியோகிக்கும்

அலுவலகங்களில் திரண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் நீண்ட

வரிசையில் காலை ஐந்து மணி முதல் காத்திருந்து பெற்றுச் செல்லும் அவல நிலை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த சிலிண்டர் தட்டுப்பாடுகளால் பொதுமக்கள் பள்ளி செல்லும் சிறுவர்கள் அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பினரும் பெரிதாக பாதிக்கப்பட்ட

நிலையில் ஆண்கள் பெண்கள் என காலை 5 மணி முதல் தற்பொழுது வரை நீண்ட வரிசையில்

நின்று கொண்டு எரிவாயு சிலிண்டரை பெற காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்த சிலிண்டர் தட்டுப்பாடுகளை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக

நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam