ஐந்து மாநில தேர்தல் தேதியை ஓரிரு நாட்களில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு
புதுடெல்லி, 13 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாடு, புதுவை, கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, இந்த மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதனால், தேர்தலை நடத்துவதற்கான
ஐந்து மாநில தேர்தல் தேதியை ஓரிரு நாட்களில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு


புதுடெல்லி, 13 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாடு, புதுவை, கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது.

எனவே, இந்த மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

இதனால், தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு, கேரளா, புதுவையில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்காளம், அசாமில் பல்வேறு கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே முறை பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்கு மேல் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வரும் 15 அல்லது 16-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM