தமிழ்நாட்டில் உள்ள கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் மருத்துவமனை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது -மா. சுப்பிரமணியன்
சென்னை, 13 மார்ச் (ஹி.ச.) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்ககத்தில் 1071 உதவி மருத்துவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர்,செய்தியாளர்
மா. சுப்பிரமணியன்


சென்னை, 13 மார்ச் (ஹி.ச.)

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்ககத்தில் 1071 உதவி மருத்துவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர்,செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:

மக்கள் நல்வாழ்வுத்துறை காலி பணியிடங்கள் இல்லாத துறையாக மாறி உள்ளதாகவும் மருத்துவத்துறையில் உள்ள பல்வேறு பணியாளர்களின் கோரிக்கைகளும் தொடர்ந்து அரசு நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்தியாவில் அரசு துறை வரலாற்றில் புதிதாக பணி நியமனம் பெறுபவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுவது தமிழ்நாட்டில் உள்ள மக்கள் நல்வாழ்துறையில் தான் என பெருமிதம் தெரிவித்தார்.

இந்த துறையில் கடந்த 5 ஆண்டுகளில் mrb மூலம் அனைத்து காலிப்பணியிடங்கள் நிரப்பி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் கடந்த 5 ஆண்டுகளில் 13,093 மருத்துவர்களுக்கு MRB மூலம் தேர்வு வைத்து பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் நல்வாழ்வு துறையில் 48,418 பேர் புதிதாக பணி நியமனம் பெற்று உள்ளதாகவும் இந்த துறையில் 17,780 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது என குறிப்பிட்டார்.

தென் இந்தியாவில் தமிழ்நாடிநாட்டில் தான் bone marrow அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் செய்யப்படுகிறது என்றும்,சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 100 ஆவது குழந்தைக்கு bone marrow அறுவை சிகிச்சை வெற்றி கரமாக செய்யப்பட்டது என பெருமிதம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் மருத்துவமனை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை பணியாளர்களுக்கு புரோட்டின் உணவுகள் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் இதுவரை எந்தவிதமான பதற்றமும் ஏற்படவில்லை என விளக்கம் அளித்த அமைச்சர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் எந்த விதமான தட்டுப்பாடும் இல்லை.

தட்டுப்பாடு ஏற்படாமல் துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அரசியல் காரணத்திற்காக அன்புமணி அறிக்கை வெளியிடுகிறார் என கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam