ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழித்து போராட்டம் - திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினர் மீது வழக்குப்பதிவு
சென்னை, 13 மார்ச் (ஹி.ச.) மே 17 இயக்கம் சார்பில் 11- ஆம் தேதி சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இடம் பெற்றிருந்த ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழிக்கும் போரட்டம் நடைபெற்றது. மே 17 இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாள
Thiru


சென்னை, 13 மார்ச் (ஹி.ச.)

மே 17 இயக்கம் சார்பில் 11- ஆம் தேதி சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இடம் பெற்றிருந்த ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழிக்கும் போரட்டம் நடைபெற்றது.

மே 17 இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் திடீரென பூங்கா ரயில் நிலையத்தில் ஒன்று கூடினர்.

பின்னர் அவர்கள் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இடம் பெற்றிருந்த ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழித்தும் , மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை எதிர்த்து கோஷம் எழுப்பிய போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மே 17 இயக்கத்தின் சார்பில் ஹிந்திக்கு திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது போரட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் திடீரென தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினர் மீது பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அத்துமீறி நுழைதல், ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோனிகா ஜெயின் என்பவரும், இந்து அமைப்பினரும் புகார் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / P YUVARAJ