Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 13 மார்ச் (ஹி.ச.)
ஹைதராபாத் மியாப்பூர் பகுதியில் சந்தாநகர் காவல் நிலையம் எதிரில் உள்ள பர்னிச்சர் கடையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஆறு மாடி கட்டிடத்தில் செயல்படும் அந்த கடையில் பர்னிச்சர்கள், வீட்டு உபயோக
மின் சாதனங்கள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடை மூடிய பின் இரவு 12 மணியளவில் கடையின் ஒரு பகுதி திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
கடையில் ஏராளமான அளவில் பர்னிச்சர்கள், வீட்டு உபயோக சாதனங்கள் ஆகியவை இருந்த காரணத்தால் தீ வேகமாக பரவி ஆறு தளங்களை கொண்ட கட்டிடம் முழுவதும் பற்றி தீ
சுமார் 30 அடி உயரத்திற்கு கொழுந்துவிட்டு எரிந்தது.
கடையின் எதிரில் இருக்கும் காவல் நிலைய போலீசார் உடனடியாக தீயணைப்புத்
துறையினரை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி கூறினர்.
ஏழு தீயணைப்பு வாகனங்கள், 20 தண்ணீர் டேங்கர்கள் ஆகியவற்றுடன் வந்து சேர்ந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
தீ விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அதற்கான காரணம் பற்றி
விசாரணை நடத்துகின்றனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தீ விபத்தில் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய்
மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam