Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மார்ச் (ஹி.ச)
ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் சுரேஷ் சங்கையா கடந்த ஓராண்டுக்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் உயிர் இழப்புக்கு முன்பு நடிகர் யோகி பாபுவை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் 'கெணத்த காணோம்'
இப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில், யோகி பாபு, கோவில் பூசாரியாக நடிக்க, கிராமத்தில் தண்ணீருக்காக தோண்டப்படும் குழியால் ஏற்படும் பிரச்சனை பற்றி இப்படம் பேசுகிறது.
கிராமத்து பின்னணியில் நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளன.
வி.ஆர். துதிவாணன் இயக்கத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'கொலைச் சேவல்' இதில் கலையரசனுக்கு ஜோடியாக தீபா பாலு நடிக்க கஜராஜ், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
200 ஆண்டு கால பாரம்பரியப்படி குலதெய்வ கோவிலுக்குச் செல்லும் ஒரு கர்ப்பிணிப் பெண் சந்திக்கும் ஆபத்துகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.
யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஸ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'வவ்வல்ஸ்'
அன் அட்லஸ் ஆஃப் லவ்.
5 கதைகளைக் கொண்ட இப்படத்தை திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய 5 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்
இப்படமும் இன்று வெளியாகிறது.
மேலும் அறிமுக இயக்குநர் ராகுல் அசோக் இயக்கத்தில், அபர்ணதி, சச்சு, ஒய்.ஜி.மகேந்திரா, ஜான் விஜய், இளவரசு, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ள வெஞ்சென்ஸ் மற்றும் போலீஸ் ஃபேமிலி ஆகிய 5 படங்கள் இன்று திரைக்கு வந்துள்ளன.
Hindusthan Samachar / P YUVARAJ