கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் அதிரடி கைது
திருவள்ளூர், 13 மார்ச் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே 42 வயதுடைய கணவனால் கைவிடப்பட்ட பெண் பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில் நேற்று இரவு பெட்டிக்கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் மூன்று பேர் திடீர
கைது


திருவள்ளூர், 13 மார்ச் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே 42 வயதுடைய கணவனால் கைவிடப்பட்ட பெண் பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில் நேற்று இரவு பெட்டிக்கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் மூன்று பேர் திடீரென அவரின் வாயை மூடி குண்டுகட்டாக தூக்கி சென்று உள்ளனர்.

தொடர்ந்து அருகாமையில் உள்ள ஏரி கரையில் வைத்து மூன்று பேரும் மாறி மாறி

பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அலறல் சத்தம் கேட்கவே அங்கு வந்த சிலர் மயக்க நிலையில் இருந்த பெண்ணை

மருத்துவமனை அழைத்துச் சென்று அதன் பின்னர் கவரப்பேட்டை காவல் நிலையத்தில்

புகார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் புகாரில் மேல் முதலம்பேடு கிராமத்தைச் சார்ந்த ரஞ்சித் (27),

துளசிராமன் (20), முத்துகிருஷ்ணன் (25) ஆகியோர் தனது வாயை மூடி வலுக்கட்டாயமாக

தூக்கிச் சென்று அருகாமையில் உள்ள ஏரிக்கரையில் வைத்து மாறி மாறி பாலியல்

பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டிருந்தது.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர்

காவல் நிலைய போலீசார் புகாருகுள்ளான மூன்று பேரையும் வலை வீசி தேடி வந்த

நிலையில் மூன்று பேரையும் கைது செய்து கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்

படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தில் அடுத்தடுத்து சிறுமிகள் மாணவிகள் பெண்கள் என பலர் தொடர்ந்து

பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும் பாலியல் பலாத்காரம் செய்வது மட்டுமின்றி

கொலை செய்து வீசப்பட்டு வரும் சம்பவங்களும் அதிகரித்து வரும் நிலையில்

கும்மிடிப்பூண்டியில் மட்டும் கடந்த சில மாதங்களில் இரண்டு பள்ளிச் சிறுமிகள்

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதும் மற்றுமோர் பெண் பாலியல் வன்புணர்வு செய்து

கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டதும்

அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள

விவகாரம் மீண்டும் கும்மிடிப்பூண்டி மக்களை பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam