Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 13 மார்ச் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக 50 ஆயிரம் சதுர மீட்டர்
பரப்பளவில், கார்னேஷன், லில்லியம், கிரிசாந்தம், ஜெர்பரா போன்ற கொய் மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
300க்கும் மேற்பட்ட விவசாயிகளும் நேரடியாகவும் 3000
தொழிலாளர்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோத்தகிரி கட்டப்பட்டு அருகே உள்ள கூக்கல் கிராம பகுதியில்,
முதல் முறையாக சூரிய காந்தி மலர்கள் சாகுபடி துவங்கப்பட்டுள்ளது.
தற்போது, ஒரு
மலர் 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது மேலும் பெங்களூரு, சென்னை உட்பட இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு, அலங்கார வகைகளுக்காக விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam