Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 மார்ச் (ஹி.ச.)
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் முடங்கியது.
மத்திய கிழக்கு போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாததால், நாடு முழுவதும் சமையல் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டரும் பல்வேறு பகுதிகளில் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகின்றது.
இது தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று மூன்றாவது நாளாக எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளனர்.
ஆனால், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து உடனடியாக விவாதிக்க அனுமதிக்க முடியாது என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்த நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பான பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM