Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மார்ச் (ஹி.ச.)
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையின் சிறப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 69.23 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பெங்களூருவிலிருந்து தனாபூர் நோக்கிச் செல்லும் SBC-DNR அதிவிரைவு ரயிலில் பயணம் செய்த வசந்த் குமார் (36) என்பவர் பெரம்பூர் ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடையில் இறங்கினார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த பாதுகாப்புப் படையினர் அவரை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது அவர் வைத்திருந்த தோள் பையை ஆய்வு செய்தபோது, அதில் ரூ. 1,19,000 ரொக்கப் பணம் மற்றும் ரூ.58,04,000 மதிப்புள்ள 450 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் மற்றும் ஆபரணங்கள் இருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த தங்கம் மற்றும் பணத்திற்கு உரிய சட்டப்பூர்வ ஆவணங்களோ அல்லது ரசீதுகளோ வசந்த் குமாரிடம் இல்லை.
எனவே, தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி-யின் உத்தரவின் பேரில், கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் மேலதிக விசாரணைக்காக வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam