Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மார்ச் (ஹி.ச)
கட்சி பெயர், சின்னம் பயன்படுத்த தடை கோரி பா.ம.க. நிறுவனர் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்திருந்ததை மறைத்து அன்புமணி தரப்பில் தடை பெற்றுள்ளதாக முறையீடு செய்துள்ளனர்.
தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் கட்சி சின்னம் தொடர்பான வழக்குக்கு தடை பெற்றுள்ளதால் அவசரமாக விசாரிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தமிழ்ச்செல்வி ஒப்புதல் அளித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ