Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 13 மார்ச் (ஹி.ச.)
ரயில்களில் அதிகப்படியான பயணிகள் இருப்பதை குறைப்பதற்காக, முக்கியமான வழித்தடங்களில் ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
அந்த வகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத்திலிருந்து சேலம் வழியாக போத்தனூருக்கு ஒரு ஸ்பெஷல் ரயில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளது.
அதன்படி, தன்பாத் - போத்தனூர் சிறப்பு ரயில் நாளை மதியம் 2 மணிக்கு தன்பாத்தில் இருந்து கிளம்பி, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 16-ஆம் தேதி காலை 7.10 மணிக்கு சேலம் வந்து சேரும்.
இங்கிருந்து காலை 7.15 மணிக்கு கிளம்பி ஈரோடு, திருப்பூர் வழியாக காலை 11.20 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
Hindusthan Samachar / JANAKI RAM