Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மார்ச் (ஹி.ச)
தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
இளம் பெண்ணின் உயிர் பறிக்கப்பட்டது மிகக் கொடுமையான ஒரு சம்பவம். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதன் முழு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. ஒரு ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பிக்கள், 6 ஆய்வாளர்கள் மற்றும் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் நிச்சயமாக விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
உணவகங்கள் மற்றும் விடுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால், மாணவர்கள் விடுதிகளில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்படும் சூழல் நிலவுகிறது. வீடுகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என ஒன்றிய அரசு கூறினாலும், இணையதளம் மூலம் பதிவு செய்யும்போது சிலிண்டர் கிடைப்பதில்லை எனப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய போர்ச் சூழலில் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.
இந்தக் குழப்பங்களுக்கு மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்.
தேர்தல் அறிவிப்பே இன்னும் வெளியாகவில்லை. முறைப்படி அறிவிப்பு வந்த பிறகு தேர்தல் அறிக்கை குறித்துத் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b